திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குள்ளாகிபாளையத்தை வசித்து வருபவர் சுகுமார். இவர் சொந்தமாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். சுகுமாருக்கு, மூன்று வருடங்களுக்கு முன்பு லாவண்யா(28) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. பிரசவம் முடிந்து பெற்றோர் வீட்டில் இருந்து லாவண்யா, கடந்த 15 நாட்களுக்கு முன் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை தொடர்ந்து, சுகமாருக்கும் லாவண்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் லாவண்யா மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், லாவண்யா இன்று அதிகாலை அவரது வீட்டின் அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சுகுமார் அளித்த தகவலின் அடிப்படையில் குண்டடம் காவல்துறையினர், லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து லாவண்யாவின் தந்தை மாரியப்பன் அளித்த புகாரின் அடிப்படையில், குண்டடம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், திருமணமான மூன்று ஆண்டுகளில் லாவண்யா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்வம் குறித்து தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, லாவண்யாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாராதபுரம் அரசு மருத்துமனை முன்பு உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.