fbpx

கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி :கணவனை தோளில் சுமந்து ஊர் முழுவதும் சுற்றி வந்த கொடூரம்..!

மத்தியபிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் பொர்படவ் கிராமத்தில் வசித்து வருபவர் மங்கிலால். இவரது மனைவிக்கும் அந்த கிராமத்தில் வசித்து வந்த வேறொருவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மங்கிலால் அவரது மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், மங்கிலால் தனது மனைவியை அவரது உறவினர்களுடன் சேர்ந்து நேற்று முன் தினம் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அவரது மனைவியை கடுமையாக தாக்கி, உடைகளை அவிழ்த்து மானபங்கம் படுத்தியுள்ளனர். பிறகு, அந்த பெண்ணை அவரது கணவரான மங்கிலாலை தோளில் சுமந்தபடி ஊர் முழுவதும் சுற்றவைத்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரவியது. இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண்ணின் கணவன் மங்கிலால் உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

கோவை குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு..! சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!

Tue Jul 5 , 2022
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மக்களின் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்வது கோவை குற்றாலம். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த சுற்றுலா தலம் உள்ளதால் இங்குள்ள இயற்கை அழகினையும், வனவிலங்குகளை கண்டு ரசிக்கவும், அருவியில் குளித்து மகிழவும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, வனப்பகுதியில் உள்ள இயற்கை […]
கோவை குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு..! சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!

You May Like