fbpx

பிரசவத்தில் இரட்டை குழந்தையுடன் உயிரிழந்த பெண்: மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்…!

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது கர்ப்பிணி பெண் உயிரிழந்ததை கண்டித்து, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியில் வசித்து வருபவர் மதன்குமார் (20). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கரி (19). நிறைமாத கர்ப்பணியான சங்கரிக்கு, வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்துள்ளன. இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் சங்கரி பிரசவ வலி ஏற்பட்டதால், பிரசவத்திற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே சங்கரி உயிரிழந்தார். இதனால் அவரது வயிற்றில் இருந்த குழந்தைகளும் இறந்து விட்டன.

இந்நிலையில் சங்கரி பிரசவத்திற்கு முன்னரே மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி கேட்டு மருத்துவமனை முன்பு திரண்ட அவரது உறவினர்கள், சங்கரிக்கு சரியான டிரீட்மென்ட் தரவில்லை என்றும், நர்சுகள் பிரசவம் பார்த்ததால் தான் அவர் உயிரிழந்தார் என கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பணியில் பிரசவ டாக்டர் இல்லாத நிலையில், நர்சுகள் டாக்டரிடம் போனில் பேசி, சங்கரிக்கு பிரசவம் பார்த்ததால் அவர் இறந்ததாகவும் தெரிவித்தனர்.

தகவலறிந்த வாணியம்பாடி டவுன் காவல் நிலைய காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக வாணியாம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Rupa

Next Post

தடம் மாறிய மனைவி: கத்தியால் குத்தி விட்டு தூக்கில் தொங்கிய கணவன்...!

Thu Jul 7 , 2022
கோயமுத்தூர் மாவட்டம், ரத்தினபுரி அருகேயுள்ள ஆறுமுக கவுண்டர் தெருவில் வசித்து வருபவர் பூபாலன். இவர் கட்டிட கூலியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாலினி (26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பூபாலன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான சூலூரில் தங்கி, அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் வாரம் ஒருமுறை ரத்தினபுரிக்கு வந்த […]
தொழில் அதிபர் கழுத்தறுத்து கொலை..! 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல்..! வெளியான திடுக்கிடும் தகவல்..!

You May Like