fbpx

2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயணிகள் ரயில் இயக்கம்..! எந்த வழித்தடத்தில் தெரியுமா?

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 12 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடையும். இதேபோல் மாலை 4.35 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில், இரவு 8.45 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடையும். இதேபோல, திருச்சியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்படும் ரயில், காலை 11.10 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் வந்தடையும். இதேபோல் மாலை 4.35 மணிக்கு
திருச்சியில் இருந்து புறப்படும் ரயில் 8.25 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் வந்தடையும். இவ்வறாக நாள் ஒன்றுக்கு இரண்டு முறை ரயில் இயக்கப்பட்டு வந்தது.

Mumbai: Western Railway extends trips of 14 pairs of summer special trains

இந்நிலையில், கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரயில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ரயிலை பயன்படுத்தி வந்த பல ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், ஈரோடு-திருச்சி, திருச்சி -ஈரோட்டிற்கு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள், அரசியல் கட்சியினர், பொதுஅமைப்பினர் சார்பில் ரயில்வே நிர்வாகத்திற்கு தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், ஈரோடு – திருச்சி பயணிகள்
ரயில் இன்று முதல் இயக்கப்படும் என அறிவித்தது.

Bullet train plans for 2 more stretches may get nod soon | Mint

அதன்படி, ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 8.10 மணிக்கு ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் புறப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காங்கிரஸ் கட்சி சிறுபான்மைப் பிரிவு சார்பில் ரயில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Chella

Next Post

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி..! சசிகலா குற்றச்சாட்டு

Sat Jul 9 , 2022
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும் பொதுமக்களையும் சசிகலா சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்த வி.கே. சசிகலாவுக்கு வேங்கையன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, “தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொலை, கொள்ளை, […]
திமுக ஆட்சியின் அவலநிலை..! இதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி தான் ஒரே தீர்வு..! - சசிகலா

You May Like