ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்புவதை கே.பி.முனுசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை கோவை செல்வராஜ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கே.பி.முனுசாமி கூலி ஆட்கள் போன்று காசுக்காக வேலை செய்கிறார். எட்டப்பன் போல் செயல்படுகிறார். திமுகவின் சில அமைச்சர்களுக்கு அவர் கொத்தடிமையாக செயல்படுகிறார். பெட்ரோல் பங்க் வாங்கவில்லை என சொல்ல கே.பி.முனுசாமிக்கு யோக்கிதை இல்லை என்று கூறினார்.
மேலும், ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்புவதை கே.பி.முனுசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், திமுக அமைச்சர் துரைமுருகன் வெற்றி பெற கே.பி.முனுசாமி மற்றும் கே.சி.வீரமணியும் செய்த சதிவலைகளை வெளிப்படுத்த வேண்டி இருக்கும். துரைமுருகன் வெற்றி பெற கே.பி.முனுசாமி நடத்திய சதிவலைகள் குறித்தான ஆதாரம் என்னிடத்தில் உள்ளது” என்று எச்சரிக்கை தொனியில் பேசினார்.