fbpx

தாயாவது சகோதரியாவது, என் விஷயத்துல யாராவது தலையிட்டீங்கன்னா இந்த கதிதான்…!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெற்ற தாயையும், உடன் பிறந்த சகோதரியையும் கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட் லிமிடெட் கம்பெனியின் பணியாளர்களுக்கான குடியிருப்பில் 19 வயது இளைஞன் தனது தாயையும் மூத்த சகோதரியையும் நேற்று கொலை செய்ததாக காவல்துறையினர், தெரிவித்தனர்.

குஸ்முண்டா, ஆதர்ஷ் நகர் காலனியில் வசிக்கும் அமன் தாஸ், வீட்டின் குளியலறையில் தனது தாய் லக்ஷ்மி(44), மற்றும் தனது சகோதரி அஞ்சல் (21), ஆகியோரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். குளியலறையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் மற்றும் அவரது மகள் இருவரையும் கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், தடயவியல் குழு மற்றும் மோப்பநாய் நாயுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து காவல்துறையினரின் தீவிர விசாரணையில், ​​அமன் தாஸ், தனது தாய் மற்றும் சகோதரியை சமையலறையில் இருந்த கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டார். அமன் தாஸ் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததால் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றிய நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து கத்தி ஒன்றை மீட்டதுடன், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

தற்காலிக ஆசிரியர் பணி.. இவர்களை முதலில் பரிசீலிக்க வேண்டும்.. உயர்நீதிமன்றம் அறிவுரை..

Sat Jul 9 , 2022
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ கடந்த 2013-ம் ஆண்டு, நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை.. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை பணி கிடைக்கவில்லை.. இந்நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு […]

You May Like