fbpx

இந்தியாவில் சமஸ்கிருத மொழியை கற்பதற்கு மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர்

சமஸ்கிருத மொழியை கற்பதற்கு புத்துயிரூட்ட, மக்கள் இயக்கம் தொடங்கப்படுவதுடன்,  இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழி இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீள் உருவாக்கம் செய்ய, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டுமென, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல் சட்ட விதிமுறைகளாலோ அல்லது அரசாங்க உதவி அல்லது பாதுகாப்பு மூலம் மட்டும், ஒரு மொழியை பாதுகாத்துவிட முடியாது“  என்று கூறியுள்ளார். 

பெங்களூருவில் , கர்நாடக சமஸ்கிருத பல்கலைகழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா மற்றும் பத்தாம் ஆண்டு விழாவில் உரையாற்றிய  குடியரசு துணைத்தலைவர்,   குடும்பம் குடும்பமாக, சமுதாய அளவில் மற்றும் கல்வி நிறுவனங்களால் தான், அந்த மொழி உயிர்ப்புடன் திகழ்வதோடு, அதனை பரப்பவும் முடியும். தொழில்நுட்பம் வேகமாக மாறி வருவதை சுட்டிக்காட்டிய அவர்,  சமஸ்கிருதம் உள்ளிட்ட நமது செம்மொழிழுகளைப் பாதுகாத்து, அதனை பரவச் செய்வதற்கு, தொழில்நுட்பம் ஏராளமான வாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.

பண்டைக்கால கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்கி, வேதம் ஓதுவதை பதிவு செய்வதோடு, பண்டைக்கால சமஸ்கிருத கட்டுரைகளின் அர்த்தம் மற்றும் முக்கியத்துவத்தை  புத்தகங்களாக வெளியிடுவது தான், சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாகும் என்று கூறியுள்ளார். 

Also Read: கவனம்.. 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இனி இது கிடையாது…! அனைத்தையும் ரத்து செய்து அரசு திடீர் உத்தரவு…!

Vignesh

Next Post

அரசுப் பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் தமிழக அரசு..! - அண்ணாமலை கண்டனம்

Sun Jul 10 , 2022
அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் போக்குவரத்துக் கழகத்தை பொருளாதார இழப்பில் இருந்து மீட்பதற்காக அதை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் பேருந்துகளை தனியாருக்கு மாற்றம் செய்ய முடிவெடுத்திருக்கும் தமிழக அரசு, பின்னர் […]

You May Like