கா்நாடக மாநிலத்தில் காதலித்த பெண்ணை சந்தேகப்பட்டு தூக்கிட்டு கொலை செய்த இளைஞா் கைது. கர்நாடக மாநிலம் தாா்வாா் மாவட்டத்தை உள்ள பா்சி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் முனிா் மகா தேஷ் (28). இவர் தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். மரியவாடா கிராமத்தைச் சேர்ந்த சோபனா என்றப் பெண் அவருடன் ஒன்றாக வேலை பார்த்து வந்தார். இருவரும் ஒன்றாக வேலை செய்யும் நிலையில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வரும் போது திடீரெனச் சோபாவுக்கு மற்றொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டது. சோபா அந்த நபருடன் தொடர்ந்து பேசி வந்தார்.
இந்நிலையில் முனீா்ருடன் சோபா பேசுவதை குறைத்துக் கொண்டார். இது முனியிருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கோபத்துடன் முனீர் சோபாவை கொலைச் செய்ய வேண்டும் என முடிவு செய்தார். கடந்த மூன்றாம் நாள் சோபாவை அழைத்திருக்கிறார். இரண்டு பேர் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த நபரிடம் பேசுவதையும் பழகுவதையும் குறைத்துக் கொள்ளும்படி சோபாவிடம் முனீர் கூறியுள்ளார். மேலும் முனிா் அந்த நபருடன் பழகக் கூடாது என சோபாவை கண்டித்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முனிர் சோபா அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து கழுத்தை சுற்றி நெருக்கி கொன்றார். சோபனா அந்த இடத்திலே உயிரிழந்தார். மூன்று நாள் கழித்து சோபனா உடல் அழுகிய நிலையில் தார்வார் புறநகர் காவல் துறையினால் கண்டறியப்பட்டது. பின்னர் காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சோபனாவை கொலை செய்தது முனியன் என தெரியவந்தது. இதை அடுத்து காவல் துறையினர் தார்வார் பகுதியில் இருந்த முனீரை தயவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.