fbpx

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை.. வானிலை மையம் வெளியிட்ட தகவல்..

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வரும் 14,15 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை
மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 16-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்..

இன்றும் நாளையும், கர்நாடகா கடலோரப்‌ பகுதிகள்‌, மத்திய அரபிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌, ஆந்திர கடலோரப்பகுட்குகள்‌ மற்றும்‌ மத்திய வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று 45 முதல்‌ 55 கி.மீ வேகத்துலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

13,14,15,16 ஆகிய தேதிகளில் கர்நாடகா கடலோரப்‌ பகுதிகள்‌, மத்திய அரபிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல்‌ பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. எனவே இந்த நாட்களில் மீனவர்கள்‌ இப்பகுததிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

400 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு.. இளைஞரை கொன்று கிணற்றில் வீசியதால் பதற்றம்...!

Tue Jul 12 , 2022
திருவண்ணாமலை மாவட்டம் கீழக்கடுங்காவலூர் கிராமத்தில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கீழக்கடுங்காலூர் கிராமத்தில் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வந்த தேவன் என்ற இளைஞர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற தேவன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். அப்பொழுது தேவனின் பைக் மற்றும் அவரது செருப்பு, […]

You May Like