fbpx

மாநில கல்விக் கொள்கை விவகாரத்தில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு..! வெளியான முக்கிய தகவல்..!

மாநில கல்விக் கொள்கை தொடர்பாக ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்க கல்விக் கொள்கை குழு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், அதற்கு பதிலாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து மாநிலத்துக்கான தனித்துவமான கல்விக் கொள்கையை வகுப்பதற்காக கல்வியாளர்கள், வல்லுநர்கள் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Deployed teachers urge TN govt to reinstate them to original schools

மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு, ஓராண்டு காலத்தில் கல்விக் கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கிடையே, அண்மையில் மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். குழுத் தலைவர் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன், குழு உறுப்பினர்கள், அரசு மூத்த அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை அக்குழுவினருக்கு வழங்கியதாக கூறப்பட்டது.

Gujarat: Education dept withdraws order on eight-hour duty for primary  teachers | Cities News,The Indian Express

இந்நிலையில், மாநில கல்விக் கொள்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து, மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த கல்விக் கொள்கை குழு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. அதேபோல் தங்களது கருத்துகளை மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் பொதுமக்கள் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக மின்னஞ்சல் மற்றும் தபால் முகவரி விரைவில் வெளியிடப்படும் என மாநில கல்விக் கொள்கை குழு தெரிவித்துள்ளது.

Chella

Next Post

“ உடனே ஒப்புதல் வேண்டும்..” அவசர அவசரமாக டெல்லி சென்ற சி.வி. சண்முகம்..

Wed Jul 13 , 2022
பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி, அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.. இதை […]

You May Like