fbpx

தவிக்கும் ஓ.பி.எஸ்… மொத்தம் 13 பேருக்கு புதிய பதவி கொடுத்து அசத்தும் எடப்பாடி பழனிச்சாமி…! குஷியில் கட்சி நிர்வாகிகள்….

அ.தி.மு.கவில் புதிய நிர்வாகிகளை நியமித்து அது தொடர்பான அறிவிப்பையும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவை தடை செய்ய ஓ.பி.எஸ் தரப்பினர் செய்த அனைத்து முயற்சிகளும் எர்கொண்டனர். ஆனால் அது எந்த பலனும் கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதனால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். வரும் ஜூலை 17-ம் தேதி அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது. இந்நிலையில் கட்சியில் புதிய நிர்வாகிகளை தற்போது நியமித்து அது தொடர்பான அறிவிப்பையும் அதிகார பூர்வமகா எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;  அதிமுகவிற்கு துணை பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கழக தலைமை நிலைய செயலாளர். துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொன்னையன் அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக தலைமை நிலைய செயலாளராகவும், பொன்னையன் அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும், அதிமுக அமைப்பு செயலாளர்களாக முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், காமராஜ், கடம்பூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், மாவட்ட செயலாளர்கள் ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Also Read: இதை செய்ய தவறினால் ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 அளவிற்கு மின் கட்டணம் கூடுதலாக செலுத்த நேரிடும்…!

Vignesh

Next Post

"சூப்பர் நியூஸ்" இனி தமிழக அரசு பேருந்தில் சுமை பெட்டி வாடகை திட்டம்‌...! போக்குவரத்து அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

Thu Jul 14 , 2022
அரசு விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழகப்‌ பேருந்துகளின்‌ சுமை பெட்டி வாடகை திட்டம்‌ விரைவில்‌ செயல்படுத்தப்படும்‌ போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ சிவசங்கர்‌ தெரிவித்துள்ளார்‌. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசு போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ வருவாயை பெருக்கும்‌ நோக்கத்தோடு பேருந்துகளில்‌ உள்ள உபயோகப்படுத்தப்‌ படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை, கடந்த 05.05.2022 அன்று போக்குவரத்து துறை மானியக்‌ கோரிக்கையின்‌ போது சட்டசபையில்‌ அறிவிக்கப்பட்டிருந்தது. […]

You May Like