கர்நாடக மாநிலம், விஜயநகரா மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தில் குடியிருப்பவர் ஹோண்ணூறு சுவாமி(26). அதே கிராமத்தை சேர்ந்த ஒருபெண்ணுக்கும், ஹோண்ணூறு சுவாமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக்கும் திருமணம் தடபுடலாக நடந்தது. திருமணம் முடிந்தவுடன் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.
அதில் தம்பதியர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். கொண்டாட்டங்களுக்கு மத்தியில் புது மாப்பிள்ளை நெஞ்சு வலி தாங்காமல் மேடையில் அமர்வதும், எழுவதுமாய் அவஸ்தை பட்டார்.நெஞ்சுவலிப்பதாக உறவினர்களிடம் செல்லியுள்ளார்.
அஜீரண கோளாறாக இருக்கும் என நினைத்த உறவினர்கள் புது மாப்பிள்ளைக்கு சோடா கொடுத்துள்ளனர். சோடா குடித்ததும் சுயநினைவை இழந்த ஹோண்ணூறு சுவாமி மேடையில் மயங்கி விழுந்தார்.
இந்நிலையில் அங்குள்ள கிராம ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஹோண்ணூர் சுவாமியை பரிசோதித்த டாக்டர் ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஹோண்ணூர் சுவாமி உயிரிழந்தாக கூறப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் உயிரிழந்ததால், விழாக்கோலம் பூண்டிருந்த கிராமம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..