fbpx

1 முதல் தொழில் முறை படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 25,000 வரை  கல்வி உதவித் தொகை…! விண்ணபிக்கலாம் என அறிவிப்பு…!

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், குழந்தைகள்,  2022-2023  ஆம் நிதி ஆண்டில்,  கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒன்றாம்   வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ. 1000 முதல் ரூ. 25,000 வரை,  கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இதற்காக https://scholarships.gov.in என்ற  தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை,  சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே,  கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர். மேலும் விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும். வகுப்பு ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.09.2022. மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022.

மேலும் விவரங்கள் பெற அணுக வேண்டிய முகவரி :  மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா  கிண்டி, சென்னை – 600032. மின்னஞ்சல் – scholarship201718tvl[at]gmail[dot]com தொலைபேசி எண்: 044-29530169 ஆகும் என மத்திய நல ஆணையர் அருண் குமார் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Also Read: எல்லாரும் கவனம்… 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 26-ம் தேதி முதல்…! ஆன்லைன் மூலம் மட்டுமே… அரசு தேர்வுத்துறை அறிவிப்பு…!

Vignesh

Next Post

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…! 10-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!

Sat Jul 23 , 2022
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த Wireman, Computer Operator And Programming Assistant பணிக்கு நான்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு அவசியம் இல்லை. இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் […]

You May Like