fbpx

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்..! டிக்கெட் விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒலிம்பியாட் தொடரை பொறுத்தவரை, போட்டிகள் இரண்டு அரங்குகளில் நடைபெறவுள்ளன. ஒரு அரங்கில் ஒரே நேரத்தில் 50 போட்டிகளும், மற்றொரு அரங்கில் 70-க்கும் மேற்பட்ட போட்டிகளும் நடைபெறவுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் என்றால் என்ன? சென்னைக்கு கிடைத்த பெருமை.. சிறப்பம்சங்கள்  என்ன? | What is chess Olympiad- Chennai to host 44th chess Olympiad -  myKhel Tamil

தற்போது இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கி இருக்கிறது. இதற்கு https://tickets.aicf.in/ என்ற வலைதளத்தில் சென்று ஒலிம்பியாட் தொடருக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 200 மற்றும் 300 ரூபாய்க்கும், இந்தியாவில் இருந்து ஒலிம்பியாட் தொடரை பார்க்க விரும்பும் நபர்களுக்கு 2000 மற்றும் 3000 ரூபாயிலும், வெளிநாட்டை சார்ந்த நபர்களுக்கு 6000 மற்றும் 8000 ரூபாய்களில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

Chella

Next Post

ஆன்லைன் பிரீபையர் விளையாட்டினால் மாணவிகள் சிக்கி சீரழியும் அபாயம்...!

Tue Jul 12 , 2022
மதுரையை அடுத்த பசுமலையை சேர்ந்த 16 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் செல்போனில் பிரீ பயர் என்னும் ஆன்லைன் விளையாட்டை எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டம் புதிய ரயில்வே காலனியை சேர்ந்த செல்வா(21) என்பவருடன் சிறுமிக்கு பிரீபயர் விளையாட்டின் மூலம் பழக்கம் உண்டானது. இவர்கள் இருவரும் பிரீபயர் ஆன்லைன் விளையாட்டை சேர்ந்து விளையாடி வந்துள்ளனர். இதுதொடர்பாக இரண்டு பேரும் […]

You May Like