fbpx

#Alert: இன்று இந்த 4 மாவட்டம் முழுவதும் கனமழை எச்சரிக்கை… 15 மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை…!

தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை கணவனைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும்,ஈரோடு, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வரும் 5-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழ்நாடு கடலோர பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோர பகுதிகள், மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: #School Fees: இனி யாருக்கும் கவலை வேண்டாம்… இவர்கள் எல்லோருக்கும் பள்ளி கட்டணம் தமிழக அரசே செலுத்தும் என அறிவிப்பு…!

Vignesh

Next Post

மாணவிகளுக்கு ரூ.1000 பணம்.. மேலும் கால அவகாசம்.. அசத்தல் அறிவிப்பு...

Tue Aug 2 , 2022
அரசுப்பள்ளி மாணவிகளின் உயர்கல்வி உறுதி திட்டத்தில் விண்ணப்பித்த மாணவிகள், தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள 2 நாள் அவகாசம் வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.. அதன்படி அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் ( பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, […]

You May Like