fbpx

சிறுமிகள் கடத்தி விற்பனை… திருமணத்திற்காகவா.? அதிர்ச்சி தகவல்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டம் ஓஜ்கார் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 23-ஆம் தேதி காணாமல் போய் இருக்கிறார்.  பெற்றோர் மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்ததில் சிறுமியை கடத்தி சென்ற பெண்ணின் அடையாளம் தெரியவந்தது.

இதை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியை கடத்திய பிரியங்கா பாட்டில் என்ற பெண்ணை தேடி பிடித்தனர். அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவரது தோழி ரத்னா கோலி துணையுடன் துலே மாவட்டம் ஷீர்புரைச் சேர்ந்த ஒரு பெண்ணிடமும் ஒரு ஆணிடமும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு சிறுமியை விற்று விட்டதாக கூறியுள்ளார். விசாரணையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கார்கோன் மாவட்டத்தில் அந்த சிறுமி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு சென்று சிறுமியை மீட்டுள்ளனர். மேலும், இதில் தொடர்புடைய நாதுராம்,  கோவிந்த் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

சிறுமிகளிடம் ஆசை வார்த்தைகள் பேசி, பழகி பிறகு திருமணத்திற்காக கட்டாயப்படுத்தி விற்பனை செய்து வந்ததுளனர். இதுவரை இந்த கும்பல் எத்தனை சிறுமிகளை கடத்தி விற்பனை செய்திருக்கிறது என்பது குறித்து காவல்துறையினர் கைதாகி இருக்கும் ஐந்து பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் படி ஷீர்புரில்  பதுங்கி இருந்த சுரேகா பாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குஜராத் மாநிலம் வதோராவுக்கு திருமணத்திற்காக சிறுமியை அனுப்பியுள்ளதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். ஆனாலும் கடத்தப்பட்ட சிறுமியை மீட்க காவல்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

Rupa

Next Post

கால்நடை மருத்துவ மாணவிகள் 2 பேர் விடுதியில் தற்கொலை முயற்சி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

Thu Aug 4 , 2022
வேப்பேரியில் கால்நடை மருத்துவ மாணவிகள் இருவர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி உள்ளது. மாணவ-மாணவிகள் தங்கி படிக்க தனித்தனியே விடுதி வசதியும் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இங்கு தங்கி கால்நடை மருத்துவ படிப்புகளை படித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதியில் நேற்றிரவு 2 மாணவிகள் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளனர். இதை பார்த்த […]
கள்ளக்காதலன் உதவியுடன் கணவனுக்கு ஸ்லோ பாய்சன்..!! மாமியாரையும் தீர்த்துக் கட்டிய மருமகள்..!!

You May Like