கோவையில் உள்ள 16 வயது சிறுமி, அவரது சித்தி வீட்டில் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று, இரவு சிறுமி மற்றும் உறவினர்கள் வீட்டின் கதவை பூட்டாமல் படுத்து தூங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நள்ளிரவு 12.30 மணியளவில், அவர்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலன் (27) என்பவர் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்து, நன்றாக தூங்கிக் கொண்டிருந்த சிறுமியின் அருகே சென்று அவரது ஆடைகளை அகற்றி, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட சிறுமி இதனால் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். இதனால் பாலன் வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டார். அங்கு, சிறுமியின் சத்தம் கேட்டவுடன் அவரது சித்தி எழுந்து பார்த்த போது சிறுமி ஆடைகள் கலைந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து, சிறுமி கூறியதை கேட்ட உறவினர்கள் வீடு முழுவதும் தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு ஒரு மறைவான இடத்தில் பாலன் ஆடையில்லாமல் நிர்வாணமாக நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் பாலனை மடக்கி பிடித்தனர். மேலும் அவரை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பாலன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர், பாலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.