கர்நாடகாவில் இரு சமுகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர்..
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஹுலிஹைடர் கிராமத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.. தகவலறிந்த காவல்துறையின் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து இதையடுத்து உள்ளூர் நிர்வாகம் அப்பகுதியில் 144 தடை விதித்துள்ளது. காவல்துறையினர் மோதலுக்கான காரணம் விசாரணை நடத்தி வருகின்றனர்..
முதற்கட்ட தகவல்களின்படி, ஒரு இந்து இளைஞர் ஒரு முஸ்லீம் பெண்ணை காதலித்து வந்தான். ஒரு முஹர்ரம் நிகழ்ச்சியின் போது, சிறுவன் சிறுமியைச் சந்திக்கச் சென்றான், அதன் பிறகு அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.. எனினும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..