பிரதமர் கிசான் டிராக்டர் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வருமானத்தை பெருக்க மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ.6000 வழங்கி வருகிறது.இதே போல மாநில அரசும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்க உதவி செய்து வருகிறது. விவசாயத்திற்குத் தேவையான உரம், விதை, மின்சாரங்களுக்கு மத்திய மாநில அரசு மானியங்களை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது விவசாயிகள் தங்கள் நிலத்தில் ஏர் உழுவதற்கு டிராக்டர் வாங்குவதற்கு மானியம் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் எப்படி பயன்படுவது என்பதை பார்க்கலாம்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பெரும்பாலானோர் டிராக்டர்களை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் அவர்களின் விவசாயம் மற்றும் வருமானம் பாதிக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, பிரதமர் கிசான் டிராக்டர் திட்டத்தை, மத்திய அரசு துவக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் டிராக்டர் வாங்குவதற்கு 20 முதல் 50 சதவீதம் வரி மானியமாக பெறுகின்றனர். மீதமுள்ள தொகை அவர்களுக்கு கடனாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க தகுதி
விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். 18 முதல் 60 வயது வரையில் இருக்கும் நபர்கள் மட்டுமே பயன் பெற முடியும். டிராக்டர் வாங்குபவரின் பெயரில் சொந்தமாக விவசாய நிலம் இருக்க வேண்டும். வேறு மானியத் திட்டங்களில் உதவி பெற்றவராக இருக்கக் கூடாது.
எப்படி பெறுவது…?
பிரதமர் மோடி டிராக்டர் மானியத் திட்டம்- 2022ன் கீழ், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் உள்ள விவசாயிகள் மானியத்தில் டிராக்டருக்கு விண்ணப்பிக்கலாம். பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பலன்கள் வழங்கப்படும். சில மாநிலங்களில், PM Kisan Tractor Scheme ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை சில மாநிலங்களில் செய்யப்படுகிறது, சில மாநிலங்களில் இவை திட்டத்திற்கான ஆஃப்லைன் விண்ணப்பங்கள். உள்ளூர் விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்பு உதவியாளர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.