fbpx

பிறந்த குழந்தையை தண்ணீரில் முழுகடித்து கொலை செய்த தாய்.. காரணத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார்..!

கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம் தொடுபுழா அடுத்து உடுமண்ணூர் முக்குளி கிராமத்தில் வசித்து வருகிறார் சதீசன். இவரது மனைவி சுஜிதா (26). இவர்களுக் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சுஜிதா மூன்றாவது முறையாக கர்ப்பமானார். மேலும் இதை அவரது கணவருக்கு தெரியாமல் மறைத்து வந்தார். இந்நிலையில் வயிறு பெரிதாக இருந்ததை பார்த்து அக்கம்பக்கத்தினர் கேட்டபோது உடல் பருமன் கூடிவிட்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் சுஜிதா ரத்த அழுத்தம் அதிகமாகி திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதை தொடர்ந்து சதீசன் அவரை சிகிச்சைக்காக தொடுபுழா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.அதில் அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பிரசவமானது தெரிந்தது. பிறகு மருத்துவர்கள் அவரிடம் இதுகுறித்து கேட்ட போது, தனக்கு குழந்தை பிறந்ததாகவும், குடும்பத்தில் உள்ள வறுமையின் காரணமாக அந்த குழந்தையை குளியல் அறையில் உள்ள தண்ணீர் வாளியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் தொடுபுழா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தண்ணீர் வாளியில் இருந்த ஆண் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுஜிதாவை கைது செய்தனர்.

Rupa

Next Post

அதிர்ச்சி..! அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்..! விசாரணையில் ஏமாற்றம்..!

Sun Aug 14 , 2022
அரும்பாக்கம் வங்கியில் பணிபுரியும் ஊழியரே நகைகளை திருடி சென்ற சம்பவத்தில், போலீசார் கைது செய்தவரிடம் நகைகள் இல்லாததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட் கோல்டு வங்கியில் நேற்று கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், வங்கியில் பணியாற்றும் முருகன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வங்கியில் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் மயக்கம் மருந்து கலந்த […]
”அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுக்கு காப்பீடு உள்ளது” - வங்கி நிர்வாகம்

You May Like