fbpx

சொத்துக்காக தந்தை மற்றும் சகோதரிகளை கொலை செய்த நபர் தப்பி ஓட்டம்.. போலீசார் வலைவீச்சு..!

உத்தர பிரதேசத்தில் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரிஜ்பால் (60). இவரது மனைவி சசிபிரபா. இவர்களுக்கு அமர் என்ற லக்ஷ் என்ற பெயரிலான மகனும், ஜோதி (25) மற்றும் அனுராதா (17) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், பிரிஜ்பால் தனது மகன் அமரிடம் சொத்தில் பங்கு இல்லை என சொல்லியுள்ளார். மேலும் மாதங்களுக்கு முன்பு சொத்தில் இருந்து அமரின் பெயரை நீக்கியதுடன், அவருக்கான உரிமையையும் நீக்கியுள்ளார். இதனால், அமர் ஆத்திரத்தில், தனது தந்தை மற்றும் இரண்டு சகோதரிகளை கொலை செய்து விட்டு அமர் தப்பியோடி விட்டார்.

இதுபற்றி அமரின் தாயார் சசி பிரபா காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

3 நாட்களுக்கு கனமழை பெய்யும்.. இந்த மாவட்டங்களில் மட்டும் தான்..

Mon Aug 15 , 2022
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று வட தமிழக மாவட்டங்கள்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.. நாளை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில […]

You May Like