fbpx

தொடரும் அட்டூழியம்.. காஷ்மீர் பண்டிட் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை.. அரசியல் தலைவர்கள் கண்டனம்..

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

காஷ்மீரில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது இது முதன்முறையல்ல.. அங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பண்டிட்களை குறிவைத்து தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதுடன், அவரது சகோதரரையும் காயப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர் 45 வயதான சுனில் குமார் பட் என்றும், அவரது சகோதரர் பிந்து குமார் பட் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த பிந்து குமார் பட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த படுகொலையை கண்டித்து பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாஜக தலைவர்கள், தொண்டர்ள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்..ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு தலைவர் சஜாத் லோன், “சோபியானில் கோழை பயங்கரவாதிகளின் மற்றொரு கொடூரமான தாக்குதல். இந்த கொடூரமான வன்முறையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.” என்று தெரிவித்தார்..

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், எம்பியுமான அசாதுதீன் ஒவைசி இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர்“ காஷ்மீர் பண்டிட்கள் பாதுகாப்பாக இல்லை என்று கூறியுள்ளார். பிரதமர் மோடியால் நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் கவர்னரும், நிர்வாகமும் தோல்வியடைந்துவிட்டன. காஷ்மீர் பண்டிட்கள் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர்.. அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று சொல்லி சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. இதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக பதிலளிக்க வேண்டும். அனைத்து காஷ்மீரி பண்டிட்களும் அச்சத்தில் வாழ்கின்றனர்.”

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில், “தெற்கு காஷ்மீரில் இருந்து இன்று பயங்கர சோகமான செய்தி. தீவிரவாதிகளின் தாக்குதலால் மரணம் ஏற்பட்டது. ஷோபியானில் தீவிரவாதிகளால் சுனில் குமார் கொல்லப்பட்டது மற்றும் பிண்டோ குமார் காயமடைந்ததை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன். . குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. ஒரு சிறுவன் உட்பட 6 பேர் கைது..!

Tue Aug 16 , 2022
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் கன்னட் தலுகாவில் அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த வெள்ளிக்கிழழை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், சிறுமியை வேறு சிலரும் பல முறை பாலியல் வன்கொடுமை […]

You May Like