ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்றும், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், கட்சியின் நலனுக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.. ஆனால் மறுபுறம் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்..
எடப்பாடி மேல்முறையீடு செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் “ எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவுமே இல்லை.. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்.. நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.. எங்களின் எண்ணம் செயல் எல்லேமே இணைப்பு இணைப்பு மட்டுமே.. அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.. சசிகலா, டிடிவி தினகரன் கட்சியில் இணைக்கப்படுவார்களாக என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா காலத்தில் இருந்து கட்சியின் கட்சிக்காக பாடுபட்டவர்கள், உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இணைத்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து ஏன் சசிகலா, டிடிவி தினகரன் பெயரை சொல்ல ஏன் தயங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் “ யாராக இருந்தாலும் வரலாம்.. அதில் சசிகலாவும் இருக்கிறார்.. டிடிவி தினகரனும் இருக்கிறார்.. அவர்கள் வந்து சேர்கிறார்களா அல்லது நாங்கள் போய் சேர்கிறோமா என்பது முக்கியமல்ல.. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களின் தலையாய எண்ணம்..” என்று தெரிவித்தார்..
இதற்கு முன்பு வரை சசிகலாவை சந்தித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார் என்பது போன்ற பல செய்திகள் வந்தன.. அப்போது சசிகலா இணைப்பு குறித்த கேள்விகளுக்கு மறைமுகமாக பதில் சொல்லி வந்த ஓபிஎஸ், தற்போது முதன்முறையாக சசிகலா, தினகரன் வரலாம்.. இணைந்து செயல்படலாம் என்று கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.. ஒருவேளை பாஜக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில் ஓபிஎஸ் இப்படி கூறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது..