fbpx

மின் கசிவால் தீ விபத்து; வீட்டின் உள்ளேயே உடல் கருகி வாலிபர் சாவு..!

கோபி அருகே உள்ள கூலை மூப்பனூரை சேர்ந்தவர் அர்ஜூன்(34). பி.ஏ.பட்டதாரியான இவர் கூலி வேலை செய்து வந்தார். அர்ஜூன் சிமெண்ட் சீட்டால் ஆன இரண்டு வீட்டில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று இரவு தனது இரண்டாவது மகன் விவினை அதே பகுதியில் இருக்கும் தாயார் கனகராணியின் வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கு ஒரு வீட்டில் மனைவி கஸ்தூரியும், மூத்த மகன் யஸ்வந்த்தும் தூங்கி கொண்டிருந்தனர். சுற்றிலும் தென்னை ஓலையால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு, மேற்கூரை , இரும்பு தகடால் அமைக்கப்பட்டு இருந்த மற்றொரு வீட்டில் அர்ஜூன் தூங்கினர். நள்ளிரவில் திடீரென மின் கசிவு ஏற்பட்டதால் தீ குடிசையில் பரவியதாக கூறப்படுகிறது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் குடிசை வீட்டை விட்டு வெளியேற முடியாத அர்ஜூன் வீட்டின் உள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் அருகில் உள்ளவர்கள் வருவதற்குள் சுற்றிலும் தென்னை ஓலையால் மறைக்கப்பட்டு இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அர்ஜூனை காப்பாற்ற முடியவில்லை. மேலும் தீ விபத்து குறித்து சிறுவலூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது.

Rupa

Next Post

இந்த மாத்திரையை பரிந்துரைக்க டாக்டர்களுக்கு ஆயிரம் கோடியா?.. குற்றச்சாட்டை நிராகரித்த நிறுவனம்..!

Sat Aug 20 , 2022
டோலோ 650 மாத்திரையை தயாரித்த நிறுவனம், இந்த மாத்திரையை டாக்டர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதற்காக, டாக்டர்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான இலவசங்களை கொடுத்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் (சிபிடிடி) டோலோ 650 மாத்திரை தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டியிருக்கிறது. இந்நிலையில், டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க டாக்டர்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான இலவசங்களை அந்த மாத்திரையை தயாரித்து வரும் நிறுவனம் கொடுத்துள்ளதாக இந்திய மருந்து மற்றும் […]

You May Like