fbpx

Chennai Day : சென்னப்பட்டணம் சென்னையானது எப்படி..? வந்தாரை வாழவைக்கும் தலைநகரின் வரலாறு..

இன்று 383வது சென்னை தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை தினம் உருவான வரலாறு குறித்து பார்க்கலாம்..

1600-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி டச்சுகாரர்களால் கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது.. வியாபாரமே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. அதன்படி முதலில் மசூலிபட்டினத்தில் தொழிற்சாலை அமைத்து வியாபாரம் தொடங்கினர். போட்டி அதிகமாக இருந்ததால் சோழ மண்டலத்தில் வேறு இடம் தேடும் பொறுப்பை கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் ஆண்ட்ரூ கோகன், பிரான்சிஸ்டே ஆகியோருக்கு கொடுக்கப்பட்டது..

கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.

இந்த அனுமதி பத்திரம் எழுதப்பட்ட தினம் தான் இன்று.. அதாவது 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ம் தேதி இந்த பத்திரம் எழுதப்பட்டது. இதுவே மதராசப்பட்டணம் உதயமான நாள்.. எனினும் தாங்கள் வழங்கிய இடத்தை, தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரில் இருக்க வேண்டுமென்று டாமர்லா சகோதரர்கள் விரும்பினர். இதனால் சென்னப்பட்டணம் என்று அழைக்கப்பட்டது..

சென்னபட்டணம் வந்ததற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. சென்னையில் தற்போதைய உயர்நீதிமன்ற கட்டிடம் உள்ள இடத்தில் சென்ன கேசவ பெருமாள் கோவில் இருந்தது.. இதனால் இந்த இடம் சென்ன கேசவபுரம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் சென்னை என்று மருவியதாகவும் கூறப்படுகிறது..

எனினும் 1639-ல் ஆங்கிலேயர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கடித்த முடித்த பிறகு தான், அதை ஒட்டிய கிராமங்கள் அனைத்தும் வியாபார நிமித்தமாக ஒன்றுடன் ஒன்று இணைந்தும், இணைக்கப்பட்டும் நகரமாக உருமாற தொடங்கியது..

மேலும் அதே ஆண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பாக சாந்தோம் பகுதி தேர்வு செய்யப்பட்டது.. ஓராண்டுக்கு பின்பு தான் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.. இந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பு பகுதிகள் அடுத்தடுத்து பெருமளவில் வளர்ச்சி கண்டன..

சென்னப்பட்டணத்தை ஒட்டியிருந்த கிராமப்புற பகுதிகளான திருவல்லிக்கேணி, எழும்பூர், சேத்துப்பட்டு, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சென்னப்பட்டணத்துடன் இணைந்தன.. 1688-ம் ஆண்டில் சென்னை முதல்நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது.. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமை சென்னைக்கு கிடைத்தது..

1746-ல் சென்னை ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் பிரெஞ்சு படைகள் கைப்பற்றின.. பின்னர் 1749-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மீண்டும் சென்னையை தங்கள் வசம் கொண்டு வந்தனர்.. அதற்கு பின்னர் சென்னை நகரம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டது.. இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்தும் ரயில் மார்க்கமாக சென்னையுடன் இணைக்கப்பட்டன..

1947-ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பின் அன்றைய மதராஸ் மாகாணத்தின் தலைநகராக சென்னை அறிவிக்கப்பட்டது.. 1969-ம் ஆண்டு மதராஸ் மாகாணம் ‘ தமிழ்நாடு’ என்று மாறியது.. சென்னை என்று பெயர் வருவதற்கு முன்பு சென்னப்பட்டணம் என்றும் மதராஸ்ப்பட்டணம் என்று அதன் பூர்வ குடி மக்கள் அழைத்து வந்தனர்..

மதராஸ் என்பதை மெட்ராஸ் என்று பிற மொழிகளில் எழுதினர்.. எனவே சென்னை நகரின் பெயரின் சென்னை என்று ஒரே பெயரில் மட்டுமே எல்லா மொழிகளிலும் அழைக்க தமிழக அரசு முடிவு செய்தது.. கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது 1996-ம் ஆண்டு சென்னை என்று பெயர் மாற்றம் செய்தார்.. தற்போது மெட்ராஸ் என்ற பெயர் பேச்சு வழக்கில் இருந்தாலும், சென்னை என்ற பெயரே அனைத்து ஆவணங்களிலும் நிலைத்து நிற்கிறது…

தமிழ்நாட்டின் தலைநகரம் என்பதை காட்டிலும், உலகில் உள்ள தமிழர்களின் முக்கிய பண்பாட்டு தலைநகரம் என்று சென்னையை குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும்.. தோன்றியது முதலே இன்று வரை தன்னை தேடி வருபவர்களுக்கு, வந்தாரை வாழ வைக்கும் இடமாகவே சென்னை விளங்குகிறது என்றால் அது மிகையல்ல.

Maha

Next Post

”இலவசங்கள் தமிழ்நாட்டை ஏழையாக்கவில்லை” - திமுக எழுத்துப்பூர்வ அறிக்கை

Mon Aug 22 , 2022
”இலவசம்” என்று அழைக்கப்படும் பொதுநல நடவடிக்கைகள், தமிழ்நாட்டை ஏழை மாநிலமாக மாற்றவில்லை என உச்சநீதிமன்றத்தில் திமுக தெரிவித்துள்ளது. மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பியுமான வில்சன், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள எழுத்துப்பூர்வ அறிக்கையில், ”இந்த திட்டங்கள் வருமான இடைவெளியைக் குறைத்து, மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்த திட்டங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்போது வாதிட்ட வில்சன், மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில் மயமாக்கலின் அடிப்படையில் தமிழ்நாட்டை முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதற்கு இந்த […]
”இலவசங்கள் தமிழ்நாட்டை ஏழையாக்கவில்லை” - திமுக எழுத்துப்பூர்வ அறிக்கை

You May Like