சேலம் அத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). இவர் சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக வேலை செய்து வருகிறார். இன்று காலை ராஜேந்திரன், சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து செட்டிசாவடி செல்லும் டவுன் பேருந்தில் நடத்துநராக சென்றார். இந்த பேருந்தை ஓட்டுநர் சீனிவாசன் ஓட்டிச் சென்றார்.
இந்த பேருந்து இன்று காலை 8:00 மணி அளவில், பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு செட்டிச் சாவடிக்கு சென்றது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்தது கொண்டிருந்தது. அப்போது பசவக்கல் பஸ் ஸ்டாப் அருகே வந்துபோது, நாய் ஒன்று பஸ் இன் குறுக்கே வந்தது. அதனை பார்த்த சீனிவாசன் நாய் மீது மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்டார்.
அப்போது பேருந்தின் முன்பக்க படிகட்டில் நின்று கொண்டிருந்த நடத்துநர் ராஜேந்திரன் பஸ்ஸிலிருந்து கீழே சாலையில் விழுந்தார். கீழே விழுந்த நடத்துனர் ராஜேந்திரனின் தலையில் பலமாக அடிப்பட்டு, துடிதுடித்து உயிருக்கு போராடினார். உடனடியாக ராஜேந்திரனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கன்னங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.