பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் கடந்த 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்திற்கு 1,683 மெட்ரிக் டன் பருத்திநூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.
1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதற்கான டெண்டருக்கு செப்டம்பர் 9ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் அறிவிப்பால் தைத்தறி நெசவாளர்களில் 15 ஆயிரம் பேரும், விசைத்தறி நெசவாளர்களில் 54 ஆயிரம் பேரும் பலன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.