fbpx

சென்னை ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசுக்கு கத்திக்குத்து.. பரபரப்பு..!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் தாம்பரம் நோக்கி புறப்பட்ட மின்சார ரயிலின், பெண்கள் பெட்டியில் ஏற முயன்ற ஆண் ஒருவரை கண்டித்ததால், ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் ஆசிர்வாவை, ஆத்திரத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை பெண் போலீஸ் ஆசிர்வாவுக்கு நெஞ்சுப்பகுதி, கழுத்துப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெரம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

Rupa

Next Post

’இதுவரை யாரும் பார்த்திராத கெட்டப்பில் கார்த்தி’..! புதிய படத்தில் வித்தியாசமான வேடம்..!

Wed Aug 24 , 2022
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் கார்த்தி இதுவரை ஏற்காத வித்தியாசமான வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ’பருத்தி வீரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான கார்த்தி, வித்தியாசமான வேடங்களில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் கிராமிய மனம் வீசும் விருமன் திரைப்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதற்கிடையே, வந்தியத் தேவனாக கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வம் திரைப்படம் அடுத்த மாதம் […]
’இதுவரை யாரும் பார்த்திராத கெட்டப்பில் கார்த்தி’..! புதிய படத்தில் வித்தியாசமான வேடம்..!

You May Like