fbpx

பிரபல வில்லன் நடிகர் சிறுமிகளின் முன் நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…!

கேரள மாநிலம் திருச்சூர் அய்யந்தோளில் உள்ள எஸ்.என்.பார்க்கின் அருகே காரில் வந்த ஒருவர் குழந்தைகள் முன்பு நிர்வாணமாக நின்றதாக குழந்தைகள் கூறியுள்ளனர். ஆனால் குழந்தைகளால்அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை. இதுபற்றி காவல் நிலையத்தில் குழந்திகளின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து சம்பந்தபட்ட நபரின் கார் கண்டுபிடிக்கப்பட்டு, காரின் நம்பரை வைத்து, குற்றவாளியை கண்டுபிடித்தனர். அந்த நபர் மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி ஆவார். இதனைதொடர்ந்து, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதற்கிடையில் ஸ்ரீஜித், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ட்ரீட்மென்ட் எடுத்து வருவதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

2016 ஆம் வருடம் மாணவர்கள் பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது, காருக்குள் நிர்வாணம் காட்டியதற்காக பாலக்காடு காவல்துறையினரால், ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஸ்ரீஜித் ரவி பிரபல மலையாள நடிகர் டிஜி ரவியின் மகன் ஆவார். தமிழில் அசுரவதம் , ஆயிரத்தில் இருவர்,கதகளி,மதயானை கூட்டம்,வேட்டை, கும்கி உள்பட பல படங்களில் நடித்து உள்ளார்.

Baskar

Next Post

”என்னதான் அவமானப்படுத்தினாலும் காங்கிரஸால திமுகவ விட முடியல” - அண்ணாமலை காட்டம்

Thu Jul 7 , 2022
தமிழகத்தில் தமிழகத்தில் ஐசியுவில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக ஆட்சியில் தென் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தராது என கூறப்பட்டது. இளையராஜா உள்ளிட்ட 4 பேர் ராஜ்யசபா எம்.பி.,க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்தியில் மோடி தலைமையிலான அரசு, அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும், வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற […]
’மாவட்ட நிர்வாகத்தில் இருப்பவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்றனர்’..! கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு..!

You May Like