பிரபல இயக்குனர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்
புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் இயக்குனர் மணி நாகராஜ் காலமானார். அவருக்கு வயது 45. நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அவரது திடீர் மறைவு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. மணி நாகராஜ் தனது வரவிருக்கும் திரைப்படமான ‘வாசுவின் கர்ப்பினிகள்’ வெளியீட்டிற்காக காத்திருந்தார். இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
வாசுவின் கர்பினிகள்’ மலையாளத்தில் வெளியான ‘சச்சாரியாயுடே கர்ப்பினிகள்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் ஆகும். நாகராஜ் இயக்குநராக 2016 இல் அறிமுகமானார். அவரது முதல் படம் ஜி.வி.பிரகாஷின் ‘பென்சில்’. இயக்குனராக அறிமுகமாகும் முன், நாகராஜ் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனரின் மனைவிக்கு எத்தனை பிரபலங்கள் உள்ளிட்ட ரசிகர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.