75 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது..
மகாராஷ்டிராவில் முதியவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை 2 நாட்களுக்கு முன்பு அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் வெளியிட்டனர். இந்நிலையில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.. இந்த இலவச பயணம் ஆகஸ்ட் 26 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு முன் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தால், இலவச பயணத் திட்டத்தில் கட்டணம் திரும்பப் பெறப்படும்.
மேலும் 65 முதல் 75 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு பேருந்து டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.. ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்ற அடையாள ஆவணங்களைக் காண்பித்தால் இலவச பயண வசதியைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.