fbpx

அதிகாலையில் வீட்டில் தூங்கியவர்களை… வெட்டி கொலை செய்த மர்ம கும்ப கும்பல்… கொடூர சம்பவம்..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் இருக்கும் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (50). இவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் வீட்டில் வசிப்பவர் பிச்சையா மனைவி ராஜம்மாள்(68). இந்நிலையில் இன்று அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் பொன்னுச்சாமியின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் உறங்கிக் கொண்டிருந்த பொன்னுச்சாமியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

பின்னர், பொன்னுச்சாமியின் வீட்டிற்கு பக்கத்து வீட்டிற்கு சென்று, அந்த கும்பல் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ராஜம்மாளையும் வெட்டிக் கொலை செய்தது. இருவரையும் வெட்டி கொலை செய்த அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இருவரின் வீட்டுக் கதவுகளும் திறந்து கிடப்பதை அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுனர் ஒருவர் பார்த்து விட்டு சந்தேகப்பட்டு அவர்களின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, பொன்னுச்சாமி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், ராஜம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்தார்.

இதை தொடர்ந்து, உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த இரண்டு பேரின் உடலையும் மீட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அடுத்தடுத்த வீடுகளில் உள்ள இரண்டு பேரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

’இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே’..! நொடிகளில் தரைமட்டமான நொய்டா கோபுரம்..!

Sun Aug 28 , 2022
9 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம், விதிகளை மீறி கட்டப்பட்டதால் 9 நொடிகளில் தரைமட்டமாக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தைக் கட்டியது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பில் இதுவரை யாரும் குடியேறவில்லை. இதில், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 32 தளங்களும், மற்றொன்றில் 29 தளங்களும் உள்ளன. இந்நிலையில், இந்த […]
’இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே’..! நொடிகளில் தரைமட்டமான நொய்டா கோபுரம்..!

You May Like