fbpx

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை..! அவருக்கு பதில் இனி இவர்தானாம்..!

ராஜா ராணி 2 சீரியல் வில்லி அர்ச்சனா விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியல் பிரபலம் அர்ச்சனா குமார் நடிக்கவுள்ளார்.

விஜய் டிவியின் சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2 . இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தொடங்கப்பட்டது. ஒரு அழகான கூட்டு குடும்பத்தை சுற்றி நடக்கும் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரட். இதை மிஸ் பண்ணாமல் பார்த்துவரும் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் தந்தார் சீரியலின் வில்லி அர்ச்சனா. தான் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததால், சீரியலில் இருந்து விலகுகிறார் என சில தகவல்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் இதுவரையில் தெரியவில்லை. 

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை..! அவருக்கு பதில் இனி இவர்தானாம்..!

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், என்னை ஆதரித்த ரசிகர்கள் மற்றும் ராஜா ராணி 2 குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள் என குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அர்ச்சனாவுக்கு பதிலாக “ஈரமான ரோஜாவே” சீரியலில் தேனு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அர்ச்சனா குமார் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை..! அவருக்கு பதில் இனி இவர்தானாம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான “பொன்மகள் வந்தாள்” என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அடி எடுத்து வைத்த அர்ச்சனா குமார், சோஷியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தனது போட்டோ, வீடியோ, ரீலிஸ் போன்றவற்றை பகிர்வதை வழக்கமாக வைத்திருப்பவர்.

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை..! அவருக்கு பதில் இனி இவர்தானாம்..!

ஏற்கனவே ராஜா ராணி 2 சீரியலின் கதாநாயகியாக நடித்த ஆல்யா மானசா தனது பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகிய போது ரசிகர்கள் இப்படி தான் அதிர்ச்சியடைந்தனர். தற்போது வில்லி கதாபாத்திரத்தில் மீண்டும் ஒரு மாற்றம் என்பது அவர்களுக்கு ஷாக்காக உள்ளது.

Chella

Next Post

தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்ட திராவிட கோட்டையை ஒருபோதும் அசைக்க முடியாது.. பாஜகவினரின் பகல் கனவு பலிக்காது.. வைகோ..!

Sun Aug 28 , 2022
நெல்லையில் மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, மிக வெற்றிகரமாக திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். சொல்லாததையும் செய்து வருகிறேன் என அவர் சொல்லி வருவதைப் போல சொல்லாததையும் செய்து காட்டி தமிழக முதலமைச்சர் சாதித்து வருகிறார். தமிழ்நாட்டில் தற்போது பொற்கால ஆட்சி நடந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பிறகு சிறந்த ஆட்சி நடைபெற முடியுமா?.. என்ற […]

You May Like