ஆந்திர மாநிலம், திருப்பதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி ரெட்டியம்மா (26). இவர்களுக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. 6 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் ரெட்டியம்மா திருப்பதியில் வாடகை வீட்டில் தங்கி கொண்டு திருமலையில் இருக்கும் ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
ரெட்டியம்மாவின் மகன் அவரது தங்கை லட்சுமியம்மாவின் வீட்டில் தங்கி அங்கிருக்கும் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் திருப்பதியில் வாடகை அதிகமாக இருந்ததால் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அங்குள்ள வீட்டை காலி செய்து திருப்பதி அருகே இருக்கும் பாக்ரா பேட்டையில் உள்ள வாடகை வீட்டிற்கு குடியேறினார். இந்நிலையில் ரெட்டியம்மா நேற்று வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தார்.
நேற்று மாலை ரெட்டியம்மாவின் வீட்டு கதவு திறந்து இருந்ததுள்ளது. அங்குள்ள நாய்கள் வீட்டிற்குள் அடிக்கடி சென்று வந்துள்ளன. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து ரெட்டியம்மாவின் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள அறையில் ரெட்டியம்மா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாக்ரா பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மோப்பநாய் அழைத்து வரப்பட்டு மோப்பம் பிடித்தவாறு சிறு தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதை தொடர்ந்து ரெட்டியம்மா பிணைத்த மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பங்க்ரா பேட்டை அரசு பஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, வீட்டில் தனியாக இருந்த ரெட்டியம்மா கொலையை பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த பெண்னின் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.