கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபடுவதில் பெங்களூர் வருகிறது. கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் கடந்த 4-ம் தேதி வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. இதனால் மாநகரமே வெள்ளக்காடானது.
தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பெங்களூரு மாநகரில் 175 ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுக்கள் தற்பொழுது மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். மேலும் மழை நீர் கால்வாய்களை அடைத்து கட்டப்பட்டிருந்த ,சொகுசு குடியிருப்பின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று , வருகிறது.
சர்ஜாபுரா சாலை, ஒயிட்பீல்டு, அவுட்டர் ரிங் ரோடு ,மாரத்தஹள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் மோட்டர்கள் வைத்தும் , தீயணைப்பு வானங்கள் மூலாகவும் வெளியேற்றி வருகின்றது. தற்போது வெள்ளம் படிப்படியாக வடிந்து இயல்புநிலைக்கு திரும்புகின்றது. இருப்பினும் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டலாம் நிலைமை சிக்கலாகிவிடும் என்பது மாநகராட்சி அதிகாரிகளின் கருத்தாகும்.