fbpx

கூல்டிரிங்ஸ் பாட்டிலில் மண்ணெண்ணெய்..! துடிதுடித்த 3 குழந்தைகள்..! அங்கன்வாடி அலப்பறை..!

குளிர்பானம் என நினைத்து கூல்டிரிங்ஸ் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை 3 குழந்தைகள் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே செல்வவழிமங்களத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சம்பவத்தன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் ஜம்போடை தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரது 3 வயது மகன் யோகேஷ், ஒன்றரை வயது மகள் வம்சிகா மற்றும் குமாரசாமி என்பவரது 2 வயது மகள் பிரியதர்ஷினி ஆகிய மூன்று குழந்தைகளும் அங்கன்வாடி மையத்தில் அரை லிட்டர் கூல்டிரிங்ஸ் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை, எதிர்பாராத விதமாக குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளனர். இதனால், 3 பேரும் வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளனர்.

கூல்டிரிங்ஸ் பாட்டிலில் மண்ணெண்ணெய்..! துடிதுடித்த 3 குழந்தைகள்..! அங்கன்வாடி அலப்பறை..!

பின்னர் இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக 3 குழந்தைகளும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு 3 குழந்தைகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மூன்று குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூல்டிரிங்ஸ் பாட்டிலில் மண்ணெண்ணெய்..! துடிதுடித்த 3 குழந்தைகள்..! அங்கன்வாடி அலப்பறை..!

மேலும், செல்வவழிமங்களத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் இவ்விவகாரம் தொடர்பாக குழந்தைகளை முறையாக பராமரிக்காத அங்கன்வாடி மைய ஊழியர் சோபா மற்றும் உதவியாளர் சாந்தி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கன்வாடி மையத்தில் குளிர்பானம் என நினைத்து கூல்டிரிங்ஸ் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை 3 குழந்தைகள் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

“ இதற்கு தீர்வு காணவில்லை எனில், மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்..” நீதிமன்றம் எச்சரிக்கை..

Mon Sep 12 , 2022
பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை எனில், மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.. திருச்செந்தூரை சேர்ந்த ராம் குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து அரசு மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.. இந்தியாவிலேயே மது அருந்தும் பழக்கத்தில் […]
’தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் நாப்கின் இயந்திரங்கள்’..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

You May Like