fbpx

மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை…! 19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கணிப்பு…!

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 18, 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசிலப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களை பொறுத்தவரை எந்த எச்சரிக்கையும் கிடையாது. வழக்கம்போல கடல் பகுதிகளுக்கும் மீன் பிடிக்கச் செல்லலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

#TnGovt: பத்திர பதிவுத்துறையில் மாற்றம்... இனி இந்த தவறை செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை...! தமிழக அரசு அறிவிப்பு...

Fri Sep 16 , 2022
போலியான ஆவணங்களை கொண்டு பதிவு செய்யும் பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பத்திர பதிவுத்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், சொத்து குறித்த வில்லங்க விவரங்களை பொது மக்கள்‌ இலவசமாகப்‌ பார்வையிடும்‌ வசதியை சில தனியார்‌ செயலிகள்‌ முறையின்றி பயன்படுத்தி வில்லங்க விவரங்களை அதிக எண்ணிக்கையில்‌ பதிவிறக்கம்‌ செய்வதைத்‌ தவிர்க்கும்‌ நோக்கில்‌ இனிவரும்‌ காலங்களில்‌ […]

You May Like