சாமானியன் திரைப்படத்தில் நடித்ததற்காக சம்பளம் கூடுதலாக வழங்க வேண்டும் என்று டீசர் வெளியீட்டின்போது நடிகர் ராதாரவி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
சாமானியன் திரைப்படத்தில் நடிகர் ராமராஜன், நடிகர் ராதாரவி ஆகியோர் நடிப்பில் ராஹேஷ் இயக்கத்தில் திரைப்படம் வெளியாக உள்ளது. படத்தின் டிரைலர் காட்சிகள் இன்று மாலை சென்னை டி.நகரில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் டிரைலர் விழாவில் பேசிய நடிகர் ராதாரவி , ’’ நான் சாமானியன் படத்தில் நடிக்க குறைவான சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டனே். இங்கு வந்து பார்க்கும் போதுதான் தெரிகின்றது. பெரிய அளவில் இந்த படத்தை தயாரித்துள்ளார்ளா என்று வியந்தேன். இதற்காக எனக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். என்னிடம் கூடுதல் சம்பளம் குறித்து பேசுங்கள். ’’ என்றார்.
இதனால் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தவாறு இருந்தனர். எனினும் இதை இயக்குனர் உள்பட பலரும் சீரியசாக எடுத்துக் கொண்டதாகவே தெரிகின்றது. முன்னதாக ராமராஜன் இந்த படத்திற்கு மிகப் பொருத்தமாக இருப்பார் எனவே அவரை நாயகனாக நடிக் வைத்திருக்கின்றோம். எம்.எஸ். பாஸ்கர் , ராதாரவி ஆகியோரும் முக்கிய வேடங்கில் நடிக்கின்றார்கள். என இயக்குனர் ராஹேஷ் தெரிவித்திருந்தார்.