fbpx

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை…! தமிழ் நன்றாக தெரிந்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள ஓதுவார் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஐந்து காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 3,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செயல் அலுவலகம், அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி-605757 என்ற முகவரிக்கு 24–ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: arulmigu-veerateswarar-temple-recruitment-2022

Vignesh

Next Post

அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்..! அசத்தல் பேட்டிங்கால் அபார வெற்றி..!

Wed Sep 21 , 2022
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்றிரவு நடந்தது. முதலில் விளையாடிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் ஓப்பனர்களாக களமிறங்கினர். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ரோகித் சர்மா (11 ரன்) ஹேசில்வுட்டின் […]
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா இந்திய அணி..? இன்று கடைசி போட்டி..!

You May Like