கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள மலம்புழா பகுதியை சேர்ந்தவர் 15 வயது. இவர் அதே பகுதியிலுள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு அவப்போது வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் ஸ்ந்த சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தைகள் நலத்துறை அலுவலகத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் சிறுமி குறித்து தகவல் அளித்தது. இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனை வந்தடைந்த குழந்தைகள் நல அலுவலர்கள் சிறுமியிடம் தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது அந்த சிறுமி, தங்களது வீடு இருக்கும் பகுதியை சேர்ந்த பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகியான ரஞ்சித் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், தனது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டு வந்த அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி தெரிவித்தார். இதனை தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரஞ்சித் என்ற இளைஞரை போக்சோ சட்டதத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைந்தனர்.