’காதலியுடன் டேட்டிங் செல்ல பணம் கேட்ட ட்விட்டர் பயனாளி..!! ரூ.500 அனுப்பிய அமித் மிஸ்ரா..!

ட்விட்டர் பதிவின் கமெண்டில் காதலியுடன் டேட்டிங் செல்ல ரூ.300 கேட்ட இளைஞருக்கு கூகுள் பே மூலமாக ரூ.500 அனுப்பினார் அமித் மிஸ்ரா.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த பதிவின் கமெண்டில் ஒரு நபர் தனது காதலியுடன் டேட்டிங் செல்ல ரூ.300 தேவைப்படுவதாகவும், பணம் கொடுத்து உதவுமாறும் கேட்டிருந்தார். இதையடுத்து, மற்றொரு நபர், பணம் கேட்ட நபரிடம் யுபிஐ விவரங்களை பகிருமாறு ரிப்ளே செய்திருந்தார். உடனே அந்த நபர் தனது கூகுள்பே எண்ணை பகிர்ந்தார். இதையடுத்து, அந்த எண்ணுக்கு ரூ.500 அனுப்பி வைத்தார் அமித் மிஸ்ரா. பணம் அனுப்பிய ஸ்கீரின்ஷாட்டை தனிப்பதிவாக பகிர்ந்த அமித் மிஸ்ரா, ‘டேட்டிங் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.  

’காதலியுடன் டேட்டிங் செல்ல பணம் கேட்ட ட்விட்டர் பயனாளி..!! ரூ.500 அனுப்பிய அமித் மிஸ்ரா..!

பணம் பெற்றுக்கொண்ட அந்த நபர் அமித் மிஸ்ராவுக்கு நன்றி தெரிவித்ததுடன், விரைவில் 500 ரூபாயை திருப்பித் தந்துவிடுவதாகவும் கமெண்ட் செய்துள்ளார். இதையடுத்து மற்ற நெட்டிசன்களும் ஆளாளுக்கு பணம் கேட்டு அமித் மிஸ்ராவின் ட்விட்டர் பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர். ஹைதராபாத் ஸ்பெஷல் பிரியாணி சாப்பிட ரூ.500 அனுப்பி வைக்குமாறு கமெண்ட் செய்திருக்கிறார் ஒரு நபர்.

CHELLA

Next Post

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம்..!! நம்பிக்கை நட்சத்திரம் விலகல்..!! பெரும் பின்னடைவு..!!

Fri Sep 30 , 2022
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பும்ராவின் பங்களிப்பு மிக முக்கியம் என்கிற நிலையில், அவர் விலகியிருப்பது அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. குரூப் 1 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி வரும் அக்டோபர் 6ஆம் தேதியன்று ஆஸ்திரேலியா செல்கிறது. […]
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்..!! இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை..!

You May Like