புதுடெல்லியின் நவாடா பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியருக்கு மனைவியும் 9 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், ஆசிரியருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இதனால், அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரியருக்கும் அவரது மனைவிக்கும் நேற்று மாலை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஆசிரியர் அவரது மகள் கண் முன்னே மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது தாக்குதலுக்கு உள்ளான பெண் உயிரிழந்து இருந்தார். மகள் கண் முன்னே மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஆசிரியரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.