சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தை பொருத்தும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயம் செய்து வருகின்றனர்.
வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25.50 குறைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையை குறைத்துள்ளன. அந்த வகையில் சென்னையில் இன்று முதல், ரூ.2,045-க்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.25.50 குறைக்கப்பட்டு, ரூ.2,009.50 என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் இன்று முதல், வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் ரூ.1,885க்கு பதிலாக ரூ.25.50 குறைத்து ரூ.1,859க்கு விற்பனை செய்யப்படும். எனினும், வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.ஜூலை 6-ஆம் தேதி, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.