பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
கடந்த ஆகஸ்ட் 20 அன்று பேரணியில் உரையாற்றிய முன்னாள் இம்ரான் கான், கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஜெபா சவுத்ரிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் கூறினார், இதனால் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. தலைநகரில் உள்ள மார்கல்லா காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்து, போலீசாரின் கோரிக்கையை ஏற்று உள்ளூர் மாஜிஸ்திரேட் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளார்.
ஆரம்பத்தில், இம்ரான் கான் மீது பயங்கரவாத சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பது, ஆனால் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டன, மேலும் வழக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் இருந்து சாதாரண அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் நீதிபதியை மிரட்டியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் தங்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட அரெஸ்ட் வாரண்ட்டுக்கு எதிரான முன் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.