அமெரிக்காவின் பிரபல மருத்துவர் கொரோனோ தடுப்பூசியின் பக்க விளைவுகளால் மாரடைப்பு மரணங்கள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதனை கட்டுப்படுத்தியது தடுப்பூசி தான். தொற்று பரவலை கட்டுபடுத்துவதோடு, கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தடுப்பூசி பேராயுதமாக விளங்கியது. உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை சுமார் 219 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்பவர்களில், 18 முதல் 39 வயதுடைய இளைஞர்களுக்கு மாரடைப்பு தொடர்புடைய மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ள டாக்டர் ஜோசப் ஏ. லடாபோ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எம்.ஆர்.என்.ஏ. வகை கொரோனா தடுப்பூசிகள் பற்றி நாங்கள் பகுப்பாய்வு செய்து உள்ளோம். அதுபற்றிய விவரங்களை வெளியிட்டு உள்ளோம். இதனை மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதன்படி, 18 முதல் 39 வயதுடைய ஆண்களுக்கு இந்த வகை கொரோனா தடுப்பூசிகளால் மாரடைப்பு தொடர்புடைய மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த உண்மையை பற்றி அறிந்து கொண்டு, புளோரிடா அமைதியாக இருக்காது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி வந்துள்ள நிலையில் இந்தியாவில் மாரடைப்பால் மரணம் அடைந்த பிரபலங்கள் கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவால்தானோ என்ற சந்தேகம் எழுகின்றது…