பிரபல இந்தி சீரியலான யே ரிஷிதா க்யா கேலத்தா –வில் நடித்த நடிகை அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது.
யே ரிஷிதா க்யா கேலத்தா என்ற பிரபலமான சீரியல் நீண்ட காலமாக வெற்றிகரமாக ஓடியது. இதில் நடிகையாக நடித்தவர்தான் வைஷாலி தாக்கர் . 2016ம் ஆண்டு ராஜன் ஷாஹி என்ற சீரியல் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். சஞ்சனா சிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைப்போல யே வாதா ரஹா, யே ஹை ஆஷிகி விருந்தா, சசுரல் சிம்கா போனற தொடர்களில் இவர் நடித்துள்ளார். கடைசியாக ரக்ஷா பந்தன் என்ற நிகழ்ச்சியில் பிக்பாஸ் 14 ன் புகழ் நிஷாந்த் மல்கானிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக இந்தூரில் வசித்து வருகின்றார். திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் சடலாமாக கிடந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு அறையை சோதனை செய்தனர். அப்போது அவர்களுக்கு கடிதம் ஒன்று சிக்கியது. அதில் காதல்விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
https://www.instagram.com/reel/CjkKpocLMUu/?utm_source=ig_web_copy_link
சசுரல் சிம்கா என்ற சீரியல் பாலிமர் தொலைக்காட்சியில் மூன்று முடிச்சு என்ற பெயரில் வெளியானது. இதன் இரண்டாவது பாகத்தில் முக்கிய பாத்திரத்தில் வைஷாலி நடித்துள்ளார். கலர்ஸ் தொலைக்காட்சியில் இந்த சீரியல் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.