தந்தை மகள் பாசத்திற்கு இதைவிட எடுத்துக்காட்டு உண்டா? நெகிழ வைத்த வீடியோ.!

தன்னுடைய தந்தைக்கு புதியதாக வேலை கிடைத்ததை ஒரு சிறுமி கொண்டாடும் நிலையில் அந்த வீடியோ இணையத்தில் பரவி நெகிழ்வை ஏற்படுத்தி வருகிறது.


உலகில் பல உறவுகள் இருந்தாலும் பெண் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த உறவு என்றால் அது தந்தை தான். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் இருக்கும் உறவும், அன்பும், பாசமும் வெறும் வார்த்தைகளில் விவரிக்கவே முடியாது.

இந்நிலையில் ஒரு தந்தைக்கு ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை கிடைக்க அந்த தந்தையின் மகள் அதை கொண்டாடுகின்ற வீடியோ பலரையும் ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சிறுமி தனது முகத்தை மூடியபடி நின்று கொண்டிருக்க அப்போது அவருக்கு முன்னால் வந்த தந்தை ஸ்விக்கி முத்திரை பதித்த டி ஷர்ட்டை காட்டுகிறார்.

மெல்ல கண்களை திறந்து அந்த சிறுமி பார்க்க தந்தைக்கு வேலை கிடைத்தது தெரிந்தவுடன் சிறுமி துள்ளி குறித்து தந்தையை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இது குறித்த வீடியோ பகிரப்பட்ட சில நிமிடங்களில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த வீடியோ இணையவாசிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகின்றது.

1newsnationuser5

Next Post

குடியரசுத்தலைவர் முர்முவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை …

Mon Oct 17 , 2022
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள ராணு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரிபுரா , அசாம் போன்ற இடங்களுக்குகடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்றிருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். பின்னர் கடந்த 14ம் தேதி டெல்லிக்கு திரும்பினார். ஏற்கனவே கண்தொடர்பான பிரச்சனை இருந்து வந்தது. இதனால் மருத்துவர்கள் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வலியுறுத்தினார்கள். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முன் சிகிச்சை […]
முர்மு

You May Like