தீபாவளியை ஒட்டி கூகுளில் ஆங்கிலத்தில் தீபாவளி என டைப் செய்தால் தீபங்களால் உங்கள் ஸ்க்ரீன் அலங்கரிக்கப்படும் செய்து பாருங்களேன்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி ஒரு சிறிய சர்ப்ரைசை கூகுள் வெளியிட்டுள்ளது. உங்கள் செல்போன் வழியாக கூகுள் தேடலில் சென்று தீபாவளி அல்லது தீபாவளி 2022 என நீங்கள் டைப் செய்தால் தீப விளக்குகள் உங்கள் ஸ்கிரீனை அலங்கரிக்கும்.
தீபாவளிக்கான கவுன்டவுன் ஏற்கனவே தொடங்கி விட்டது. உங்களில் சிலர் ஏற்கனவே பட்டாசுகளை வெடிக்க தொடங்கி இருக்கலாம். தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கூகுள் நிறுவனம் தன் பாணியிலான – ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் அழகான – தீபாவளி வாழ்த்தை தெரிவித்து வருகிறது!
Diwali என்றோ அல்லது Diwali 2022 என்றே டைப் செய்து சேர்ச் செய்ய வேண்டும்! உங்கள் ஸ்மார்ட்போனில் அல்லது உங்கள் லேப்டாப் அல்லது உங்கள் டெஸ்க்டாப் ஸ்க்ரீனில் ஒரு “மினுமினுப்பான” அகல் விளக்கு தெரியும்! அந்த அகல் விளக்கை கிளிக் செய்யவும். உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும், உங்கள் வாயில் புன்னகையை வரவழைக்கும் ஒரு அழகான தீபாவளி சர்ப்ரைஸ்-ஐ நீங்கள் காண்பீர்கள்! மேலும் அந்த அகல்விளக்கை நீங்கள் உங்கள் விரல்களால் அல்லது மவுசால் தொட்டு அனைத்து விளக்கை ஏற்றலாம். நீங்களும் விளக்கேற்றுங்கள்..