fbpx

20 லட்சத்திற்கு மனிதக்கறியை விற்ற சம்பவம்.! நாட்டை உலுக்கிய சம்பவத்தில் அடுத்த அதிர்ச்சி.!

கேரளாவில் திருவனந்தபுரத்தின் பத்தினம்திட்டாவை அடுத்த இலத்தூரில் மேலும் ஒரு நரபலி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக பெண் பத்மா, எர்ணாகுளம் பெண் ரோஸ்லி ஆகிய இருவரும் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரிதும் துயரத்தை தருகிறது.

இது தொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்த பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்த போலீஸ் விசாரணையில் பகவல் சிங் மற்றும் முகமது ஷபி பேஸ்புக் மூலம் நண்பர்களாகினர்,

அவரை செல்வந்தர் ஆக்குவேன் எனக்கூறியே பெண்களை கடத்தி நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். நரபலி கொடுத்த பெண்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி அவற்றை சமைத்து சாப்பிட்டதுடன், மீதி இருக்கும் மாமிசத்தை பிரிட்ஜில் பாதுகாப்பாக வைக்குமாறு கூறியுள்ளார்.

அவர் கூறியபடி, பகவல் சிங்-லைலா தம்பதியினர் வீட்டின் பிரிட்ஜில் கிட்டத்தட்ட 10 கிலோ நரமாமிசத்தை பதுக்கி வைத்துள்ளனர். பகவல் சிங் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கிருந்து நரமாமிசத்தை கைப்பற்றிய போலீசார் அதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை போது நரமாமிசத்தை பதுக்கி வைத்தது ஏன்? என்று கேட்டபோது, அதனை விற்றால் அதிக பணம் கிடைக்கும் என்று முகமது ஷபி தன்னிடம் கூறியதாக கைதான லைலா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மேலும் ரோஸ்லி, பத்மாவை நரபலி கொடுக்கும் முன்பு முகமது ஷபி ஏற்கனவே ஒரு பெண்ணை நரபலி கொடுத்ததாக கூறியிருக்கிறார். அந்த பெண்ணின் மாமிசத்தை பெங்களூருவில் இருந்து வந்த மந்திரவாதிகள் அதனை வாங்கி சென்றதாகவும் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக கூறியுள்ளார்.இதனை நம்பித்தான் நாங்கள் வீட்டில் இந்த நரமாமிசத்தை பாதுகாப்பாக வைத்தோம், என்று விசாரணையில் கூறியுள்ளார்.

கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜிடம் கூறும்போது, நரமாமிசம் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. பகவல் சிங், லைலாவை ஏமாற்றவே முகமது ஷபி இப்படி கூறியுள்ளார். என்றாலும் நாங்கள் மேலும் இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களையே சேகரித்து வருகிறோம், பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. விரைவில் அதனை கோர்ட்டில் சமர்ப்பிப்போம், என்று கூறியுள்ளனர்.

Rupa

Next Post

'ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடலன்னா அவ்வளவு தான்' அரசு அதிரடி கெடுபிடி.!

Thu Oct 20 , 2022
நூற்றாண்டுகள் ஆயிரம் தாண்டினாலும் விபத்துகளுக்கும் அதன் பலிகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இதனை விட மிகப்பெரிய வருத்தம் என்பது அவசரத்தில் வரும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் இருப்பது தான். இதை தடுக்க தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, “தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பபடும் என தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் , தீயணைப்பு வாகனங்களுக்கும் வழிவிடத் […]

You May Like