fbpx

கோவை தீ விபத்து : பலியானவரின் அடையாளம் தெரிந்தது !!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து கார் தீப்பற்றிய விபத்துக்குள்ளானதில் பலியானவரின் அடையாளத்தை காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

இன்று காலை கோவையில் கார் ஒன்று சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து திகு திகுவென எரிந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. முதற்கட்ட விசாரணையில் காருக்கான எரிபொருள் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. வேகத்தடையில் கார் ஏறி , இறங்கியபோது இந்த விபத்து நடந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இறந்தவர் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் உயிரிழந்தவர் ஜெமோசா முபின் என்பது தெரியவந்துள்ளது. இவர் உக்கடம் ஜி.எம்.நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் பழைய துணி விற்பனை செய்யும் வேலை பார்த்துவந்துள்ளார்.
2019ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் இவரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. முழு விசாரணை முடிந்த பின்னரே வேறு பின்னணி உள்ளதா என தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Next Post

#School: நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை....! தமிழக அரசு அறிவிப்பு...!

Mon Oct 24 , 2022
தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ அனைத்துக்‌ கல்வி நிறுவனங்களுக்கு மட்டும்‌ 25.10.2022 அன்று விடுமுறை . இவ்வாண்டு தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடும்‌ பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள்‌ மட்டும்‌, தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும்‌, அவ்விடுமுறையை ஈடு செய்யும்‌ வகையில்‌ 19.11.2022 அன்று பணி நாளாக […]
கொரோனா பரவலால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்..!

You May Like